Subscribe Us

header ads

திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளித்தார் ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)


அத்தனகல்லை, திகாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரியின் புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கடந்த (17) நடைபெற்றது.

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை சிலர் குழப்ப முற்படுகின்றபோதும் தேசிய நல்லிணக்க கொள்கையை வெற்றிபெறச் செய்வதன் மூலமே நாட்டில் நிலையான சமாதானம் சாத்தியமாகுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.



மல்வத்து பிரிவின் சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அன்பளிப்பில் இந்த புதிய மூன்று மாடி கட்டிடம் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்து அதனை மாணவர்களிடம் கையளித்தார்.

சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், அத்தனகல்லை, திகாரிய பிரதேச மக்களின் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கும் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.



கண்டி மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல் கும்புரே விமல தம்ம தேரர், களனி வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவர் சங்கைக்குரிய கலாநிதி வெலமிட்டியாவே குசலதம்ம நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச, பாடசாலை அதிபர் எம்.ஏ.எம் அஸ்மீர் ஆகியோரும், பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







Post a Comment

0 Comments