Subscribe Us

header ads

16 வயது இளம்பெண்ணை மனந்த 65 வயது ஓமான் நாட்டவர் - சிக்கலில் சிறுமி


ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுக்கும், ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் திருமணம் நடைபெற்றது. தற்போது, அப்பெண் மஸ்கட்டில் கணவருடன் இருக்கிறார்.

இதற்கிடையே, அப்பெண்ணின் தாயார் ஐதராபாத் போலீசில் புகார் அளித்ததன் மூலம், இந்த திருமணம் வெளியே தெரியவந்துள்ளது. தன் மகளை ஓமன் முதியவர் கொடுமைப்படுத்துவதாக அவர் புகாரில் கூறி உள்ளார். மகளை திருப்பி அனுப்புமாறு கூறியபோது, ‘உங்கள் மைத்துனியின் கணவர் சிக்கந்தருக்கு ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறேன். அதை திருப்பி கொடுத்தால், உங்கள் மகளை திருப்பி அனுப்புகிறேன்’ என்று ஓமன் முதியவர் கூறியதாகவும் அப்பெண் தெரிவித்தார். சிறுமியின் உறவுக்கார பெண் மற்றும் அவருடைய கணவர் பொய் சொல்லி, சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி  ஓமன் முதியவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். 

இதன் அடிப்படையில், ஓமன் நாட்டுக்காரர், சிக்கந்தர், அவருடைய மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

16 வயது இளம்பெண்ணை இந்தியாவுக்கு அழைத்துவர மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரி மேனகா காந்தி வெளியுறவுத்துறை மந்திரிக்கு கோரிக்கை விடுத்து உள்ளார், சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளார். 

இறந்துவிடுவேன்

மஸ்கட்டில் இருந்து போனில் பெற்றோர்களிடம் பேசிய சிறுமி “நீங்கள் என்னை இங்கிருந்து காப்பாற்றவில்லை என்றால், நான் இறந்துவிடுவேன்..” என அழுது உள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

Post a Comment

0 Comments