Subscribe Us

header ads

சினிமா பாடலையே முஸ்லிம்கள் பாடக்கூடாது எனும்போது ஷிர்க் வைக்கும் பாடலை முஸ்லிம்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.


சவூதி முஸ்லிம்கள் சவூதி மண்ணை வணங்க மாட்டார்கள்.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் பாகிஸ்தான் மண்ணை வணங்க மாட்டார்கள்.

உலகின் எந்த நாட்டு முஸ்லிம்களும் அந்த நாட்டு மண்ணை வணங்க மாட்டார்கள்.

ஏனென்றால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை மட்டுமே வணங்குவார்கள்.

இறைவனுக்கு இணையாக யாரையேனும் வணங்கி விட்டால் அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு எதிராக செயல்பட்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

எனவே முஸ்லிம்கள் எந்த சூழலிலும் யாரையும், எதையும் வணங்க மாட்டார்கள்.

இந்துத்துவ சிந்தனையுள்ள எவனோ ஒரு கிறுக்கன் கழிவறையில் கிறுக்குவதுபோல் எவனோ எழுதிய பாடலை நாங்கள் பாடாவிட்டால் தேசதுரோகிகள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் ?

இறைவனுக்கு இணை வைக்கும் வந்தே மாதரம் பாடலை பாடாதவர்கள் தேச துரோகிகள் என்றால் நிச்சயமாக நாங்கள் தேச துரோகிகளே...

சுனாமி, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் தவித்த வாயிக்கு தண்ணீர் தராத பாஜக கும்பல் தேசப்பற்றை (?) பற்றி முஸ்லிம்களிடம் பேசுகிறார்கள்.

சினிமா பாடலையே முஸ்லிம்கள் பாடக்கூடாது எனும்போது ஷிர்க் வைக்கும் பாடலை முஸ்லிம்கள் ஒருபோதும் பாடமாட்டோம்.

எங்களுக்கு இறைவன் மட்டுமே முதன்மையானவன். இறைவனுக்கு இணையாக இந்த உலகத்தையே கொண்டு வந்து வைத்தாலும் வணங்க மாட்டோம்.

-முகநூல் முஸ்லிம் மீடியா-

Post a Comment

0 Comments