பெங்களூரில் இசைக் கலைஞர் ஒருவர் தனது மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது கித்தார் வாசித்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இசைக்கலைஞர் துஷார் (பெயர் மாற்றம்) நரம்பியல் பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டிருந்தார். அவர் இசைக் கருவிகளை வாசிக்கும் போது தனது இடது கை விரல்களை அசைக்க முடியாமல் இருந்தது. இதனால் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து துஷாருக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு எந்த பகுதியில் பாதிப்பு இருப்பது என்பதை அறிய மருத்துவர்கள் அவரை கித்தார் வாசிக்க கூறியுள்ளனர். தலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக படுக்கவைக்கப்பட்ட நிலையில் அவர் கித்தார் வாசித்த படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், துஷாரின் மூளையில் சிறிய பாதிப்பு இருந்தது. அதனால் அவரது விரல்கள் செயல்படாமல் இருந்தன. அவர் இசைக்கருவிகள் வாசிக்கும் போது மூளையின் எந்த இடத்தில் பாதிப்பு இருக்கிறது என்பதை எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக கண்டறியலாம். அதன் காரணமாகவே அவரை கித்தார் வாசிக்க செய்தோம்’ என தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்குப் பின் தனது கை விரல்கள் நன்கு குணமடைந்து விட்டதாக துஷார் தெரிவித்துள்ளார்.


0 Comments