அரைவாசி பழுத்த நிலையில் உள்ள ஈத்தம் பழங்கள் தற்போது உள்ளூர் தோட்டங்களிலிருந்து வரத் தொடங்கியுள்ளதாக பெனின்சுலா செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பெட்டிகளில் குறைந்த விலையில் பிரபலமான அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக தெரிவித்துள்ளத,
ஈத்தம் பழங்களின் தரம் பொறுத்து ஒரு கிலோ பழம் 10-20 றியால்கள் வரை தான் விற்பனை செய்யப்படுகின்றன. கத்தார் முழுவதிலும் உள்ள சூபர் மார்கட்டுக்கள், மால்கள் உட்பட சில்லறைக் கடைகளில் கூட கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக உம்ஸலால் பகுதியில் உள்ள பிரபல தோட்டத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.



0 Comments