Subscribe Us

நாட்டை ஆட்சி செய்வதற்கு உங்களது உதவி அவசியமில்லை - மஹிந்தவிற்கு மங்கள பதிலடி


நாட்டை ஆட்சி செய்வதற்கு உங்களது உதவி அவசியமில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளார்.
அண்மையில் மஹிந்த ராஜபக்ச டுவிட்டர் ஊடாக “நாட்டின் நலனுக்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“இல்லை உங்களது உதவிக்கு நன்றி. நிச்சயமாக இந்த நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது குறித்து உங்களது ஆலோசனை தேவையில்லை. நீங்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள குழப்பங்களை பாருங்கள். அதனை நாமே தீர்த்து வருகின்றோம்” என மங்கள சமரவீர டுவிட்டர் மூலம் பதிலளித்துள்ளார்.

Post a Comment

0 Comments