Subscribe Us

புத்தளம் அமைதி தொண்டார்வ நிறுவனத்தால், புத்தளம் நகரப் பாடசாலைகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. (படங்கள் இணைப்பு)


பாடசாலைக்கொரு மடிக்கணினி : சுமார் ஆறு மாதமாக திட்டமிடப்பட்டு புத்தளம் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளுக்கும், அதன் அதிபர்கள் நிர்வாகத்தை திறமையாக நடத்தி செல்ல உதவி செய்யும் வகையில் அவர்களுக்கொரு மடிக்கணினி கொடுப்பதட்கான திட்டம் ஒன்றை வகுத்து அமைதியாக வேலை செய்து வந்தார்கள் இந்த அமைதி தொண்டர் அணியினர்.

அதன் வகையில் முதற்கட்டமாக புத்தளம் விஞ்ஞானக்கல்லூரிக்கும், வெட்டாலை அசன் குத்தூஸூக்கும், பாத்திமா கல்லூரிக்கும், மணக்குன்று முஸ்லீம் மகா வித்தியாலயத்திட்கும் இன்று காலை ஏற்கனவே பாவிக்கப்பட்ட, பாவனைக்கு தகுந்த, திறமையாக வேலை செய்யக்கூடிய மடிக்கணினிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

அடுத்த கட்டமாக மீதமுள்ள அனைத்து பாடசாலைக்கும் மடிக்கணினிகள் வழங்குவதட்கான ஏட்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதினையும் அமைதி தொண்டர்கள் தெரிவித்தனர்.

-Silent Volunteers-




Post a Comment

0 Comments