Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானம் இனிமேல் பாடசாலை தவிர்ந்த ஏனைய பொது விளையாட்டு நிகழ்வுகளுக்கு வழங்கப்படமாட்டாது


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானம் இனிமேல் பாடசாலை தவிர்ந்த ஏனைய பொது விளையாட்டு நிகழ்வுகளுக்கு வழங்கப்படமாட்டாது என அறியக்கிடைத்தது,இதற்கான ஏற்பாடுகள் பாடசாலை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது இதற்கு முக்கிய காரணம் மைதானத்தில் அருகில் வசிக்கும் பொது மக்களின் கடுமையான எதுர்ப்பு எனவும் தெரியவருகிறது .


எவ்வாறு இருந்தாலும் தற்போது கல்பிட்டிக்கு ஒரு பொது விளையாட்டு மைதானத்தின் அவசியத்தின் தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.

ஆகவே தற்போது கல்பிட்டியில் வளர்ச்சி பற்றி பேசும் அரசியல் தலமைகளும் புத்தள தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எமது பகுதி மாகாண சபை உறுப்பினர்களும் உள்ளூர் அரசியல் வாதிகளும் இதற்கான முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் அதே போல் கல்பிட்டியில் இருக்கும் விளையாட்டு கழகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான விளையாட்டு மைதானதாதை பெற்றுக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் இறங்க வேண்டிய தருனமும் இது.

ஆகவே கல்பிட்டியில் துடிப்பான இளைஞர்களை கொண்ட விளையாட்டு கழகமான KCC விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கான அன்பான வேண்டுகோள் நீங்கள் தலமை தாங்கி அனைத்து கழகங்களையும் ஒன்றினைத்து அரசியல் வாதிகளுடன் இணைந்து பொது விளையாட்டு மைதானத்தை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை ஆரம்பியுங்கள்.

இன்ஷா அல்லாஹ் கல்பிட்டி இளைஞர்களால் முடியும் என்று காட்டுவோம் நிச்சயம் சகல வசதிகளும் கொண்ட ஒரு பொது விளையாட்டு மைதானம் எமது ஊரில் உருவாகும்.

இன்ஷா அல்லாஹ்.
Rizvi Hussain

Post a Comment

0 Comments