Subscribe Us

header ads

சிங்கத்தின் கோட்டைக்குள் கோவேறு கழுதை???



ஏழைகளின் வாழ்வு தனை ஒளியூட்ட வன்னியிலே வந்துதித்த வரலாற்று நாயகன் இவன்..!!

மலையாக இருந்த மரத்தை மடுவாக மாற்றிய மாயவனை சேவை மழையால் திணற வைத்து ஊரெங்கும் உளறித்திரியும் மனநோயாளியாய் மாற்றிய மாவீரன் இவன்...!!

திக்கெங்கும் தினம் தோறும் தூபமிடும் உன் குரலை எக்கனமும் அழித்தொழிக்க புறப்பட்ட பல கூட்டம் திக்கின்றி தடுமாறி திரியும் வேளையிலே....!!

கிழக்கினிலே வ(வா)க்கற்று வாலாட்ட வடக்குப்பக்கம் கோவேறு கழுதையொன்று வழி தவறி வந்ததுவோ #பேதை அவள் பேச்சை நம்பி...!!

சேவை தனில் தேவை நீக்கி எம் மனதில் நீங்காத இடம்பிடித்த செம்மல் நீ! பிறந்த மண்ணில் கால்பதிக்க வந்த கோமாளி கை சேதப்படப்போகின்றார் கயவர்களை நம்பி....!!

#முடியாட்சி முடிவடைந்து முன்னூறு ஆண்டாகியும் #ராணி என பேர்சூட்டி முழு ஊரும் திரிகின்றாள் பக்கத்து நாட்டு#கோவேறு வண்டிக்காரனுடன்...!!!

மாமனிதர் மறைவின் பின் ஏகமெங்கும் ஏற்றுக்கொண்ட எம் தலைவனை ஈன்ரெடுத்த வன்னி மண்ணில் முகம்காட்டப் பார்க்கின்றீரே மூக்குடையும் என மறந்து...!!

ஒழிக்க நினைக்கும் இனவாதிகளையே திணற வைக்கும் (இறைவன் துணையுடன்) எம் தலைவனை இரண்டு கால்#கோவேறுவா மிரள வைக்கும்..??

வந்த வழி சென்று விடு வாகனக்கூலி நஷ்டமென்று..!! கஷ்டப்பட்டு கால் பதித்தால் மிச்சப்பட எதுவுமின்றி துச்சப்பட வேண்டிவரும் உச்சத்திலே...!!

எம்.எஸ்.எம்.ஆஸிப்

Post a Comment

0 Comments