Mohamed Nizous
டவுட்டையே நீ சுமந்து இங்கு வாழலாகுமா
நாறிடும் வாழ்க்கைகள்
மூழ்கிடும் நாசத்தில்
இல்லாளின் கற்பினிலே
இருக்கும் டவுட் நாசம் தரும்
பொல்லாத விளைவு தரும்
புருஷன் மேல் உள்ள டவுட்.
இல்லாத ஏழை என்றால்
எல்லோரும் டவுட் கொள்வார்.
நல்லோரில் கொள்ளும் டவுட்
நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அள்ளாஹ்வே தடுத்த விடயம்
அநாவசிய டவுட் கொள்ளல்
கஷ்டப்பட்டு முன்னேறின்
கடத்தல் என டவுட் கொள்வார்.
நஷ்டப்பட்டு விழுந்து விட்டால்
நாடகம் என டவுட் கொள்வார்.
உதவிக்கரம் தருவோர்க்கும்
உள்நோக்கம் டவுட் என்பார்.
பதவிகளில் இருப்போரின்
பணத்தினிலே டவுட் கொள்வார்
கெட்ட எண்ணம் கொண்டு கொண்டே
கெட்டழிந்து போகின்றார்.
கண்டபடி டவுட் கொண்டோர்
கொண்ட பயன் ஏதுமில்லை
தண்ட சொந்த வாழ்க்கையையே
தான் நாசம் ஆக்கிக் கொண்டார்
அலர்ட் என்ற பெயரில் சிலர்
டவுட் கொண்டு அலைகின்றார்.
விளங்காத மன நோயால்
கலங்குகிறார் இறுதியிலே.
டவுட் கொண்டு வாழ்க்கையிலே
அவுட் ஆகிப் போகின்றார்.


0 Comments