Subscribe Us

header ads

பொலன்னறுவை அத்தனகடவல மகா வித்தியாலயத்தில் பாடகராக மாறிய மைத்திரி! இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்


பொலன்னறுவை அத்தனகடவல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அறிவியல் பிரிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
அந்த வித்தியாலயத்தில் 100 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அறிவியல் ஆய்வகம் கட்டடத்தொகுதியே ஜனாதிபதியால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இங்கு இசை பிரிவு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இசை கற்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடல் ஒன்றை கற்பித்துள்ளார்.
இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்த மாணவர்களுடன் இணைந்து பௌத்த மத பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு ஜனாதிபதி தனக்கு தெரிந்த தாளத்தை பயன்படுத்தி பாடி மகிழந்துள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியுடன் இணைந்து பாடல் பாடியமை குறித்து பாடசாலை மாணவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இதன்மூலம் எந்த தரப்பினருடனும் இயல்பாகவும் சாதாரணமாக நட்புறவு கொண்டாடும் ஜனாதிபதியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments