Subscribe Us

header ads

தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லாவின் வாழ்த்து செய்தி

இந்த நாட்டில் வாழும்  அனைத்து இன மக்களும் சாந்தியும் .சமாதானமும் கொண்டவர்களாக வாழ இந்த நாளில் நாம் பிரார்த்தனைகளை செய்வோம் என புத்தளம் மாவட்ட தமிழ்.முஸ்லிம் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா தமது பெருநாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது –

நோன்பு எமக்கு கற்றுத்தந்த பாடங்களை மறந்து விடாமல் ஏனைய காலங்களிலும் அதனது தாற்பரியங்களை உணர்ந்து செயற்படுகின்ற  போது உள்ளார்ந்த மாற்றங்களை எமக்குள் கொண்டுவர முடியும் .

இதனை எமது வாழ்வில் கடைபிடிக்க அனைவரும் உறுதி பூனுமாறும் வேண்டியுள்ள  புத்தளம் மாவட்ட தமிழ்.முஸ்லிம் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா இனங்க்களுக்கிடையில் ஒற்றுமையினை ஏற்படுத்தும் பெருநாளாக இந்த நோன்பு பெருநாளை அமைத்துக் கொள்ள இன்றைய தினத்தில் நிய்யத்து வைத்துக் கொள்ளுமாறும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும்  தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments