Subscribe Us

header ads

ஆறு முஸ்லிம் நாடுகளுக்கான தடை உத்தரவில் தளர்வு! அமெரிக்கா


அமெரிக்காவுக்குள் நுழைய ஆறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.


இதனால், அமெரிக்காவின் கீழ் நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், ட்ரம்ப்பின் தடை உத்தரவுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.   இந்நிலையில், தற்போது இந்த விதிமுறையில்  தளர்வு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments