Subscribe Us

header ads

பாகிஸ்தான் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்யும் : பாகிஸ்தான் ஜனாதிபதி ..


மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுக்கு பாகிஸ்தான் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யு பின்நிற்கப்போவதில்லைஎன  ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் கடந்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான்சென்ற போது அங்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதுஅவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் பயணத்தை ரத்துசெய்யுமாறு இலங்கை அரச உயர்மட்டம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக பாக்கிஸ்தான் அரச தரப்பு மஹிந்த ராஜபக்‌ஷஅவர்களிடம் எத்திவைத்துள்ளாத தகவல் வெளியாகியுள்ளது.

இனவாத குழுக்களை ஏவி விட்டு முன்னாள் ஜனாதிபதியை சில மேற்குலக  சக்திகள் தோற்கடித்துவிட்டதாகபாகிஸ்தான் ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசு காவி தீவிரதாத  மோடி அரசுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள நிலையிலும் கடந்த ஆட்சிமாற்றத்தில் இந்தியா நல்லாட்சிக்கு நிதி மற்றும் இதர உதவிகளை  அளித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளநிலையிலும் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளமை இங்குசுட்டிக்காட்டத்தக்கது . 

Post a Comment

0 Comments