கட்டாருக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்திருக்கும் இராஜதந்திர முடிவுக்கு எதிராகவோ, அல்லது கட்டார் சார்பாக அந்த நாட்டுக்கு அனுதாபங்களை தெரிவித்து ஆதரவாக சமூக வலைத்தளங்களில் எழுதினாலோ ஐக்கிய அரபு எமிரேட்சின் பெடரல் லோவின் கீழ் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்து மக்களை எச்சரிக்கை செய்துள்ளது.
நாட்டின் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் முதல் பதினைந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்படுவதோடு ஐந்து லட்சம் திர்ஹமுக்கு குறையாத தண்டப்பணமும் செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் சமூக வலைத்தளங்களை உபயோகப்படுத்துவோர் மிக கடுமையாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சமூக வலைத்தளங்களை மிக கவனமாக உபயோகிக்கும் படியும் அரசு முதன்மை வழக்கறிஞரான டாக்டர் ஹமாத் சைப் அல் சம்ஸி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
-Razana Manaf-


0 Comments