சவுதியில், மனைவியுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 100 ரியால் வரி கட்ட வேண்டும். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்தால் மாதத்திற்கு 300 ரியால் வருடத்திற்கு 3600 ரியால் வரிசெலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வரி வரும் 2020 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு ஒரு முறை 100 ரியால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதியில் தங்கி வேலை செய்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அரசின் இந்த அறிவிப்பால், மனைவி மற்றும் குழந்தைகளை தங்களுடன் தங்க வைத்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினரை சொந்த ஊர்களுக்கே திருப்பி அனுப்பிவிட்டு, மீண்டும் பேச்சுலர் வாழ்க்கை நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடிபெயர்ந்தோர் உரிமை ஆர்வலர் பீம் ரெட்டி மந்தா கூறுகையில். நான்கு மாதம் முன்பே இங்கு வாழும் வெளிநாட்டினர்கள் தங்கள் குடும்பத்தினரை சொந்த நாட்டிற்கு அனுப்ப தொடங்கிவிட்டனர்.
இந்த வரி விதிப்பு சவுதியில் வாழும் வெளிநாட்டினர்களை மிகவும் பாதிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


0 Comments