Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (பெருநாள் பிறை) கவிதை தொகுப்பு.



Mohamed Nizous

தேசிய சேவை
தெளிவின்றி இயங்கும்.
பேசிப் பேசி
பிறையின்னும் இல்லையென
சொல்லச் சொல்ல
செல்லங்கள் சினுங்கும்.

காணாத பிறையை
கண்டு பிடித்திட
போணின் துணையுடன்
போராட்டம் வெடிக்கும்

மொட்டை மாடி
மூலைச் சந்தி
நட்ட நடு ரோடு
நாக மரக் கிளை
அத்தனை இடமும்
ஆட்கள் நின்று
பிறையைக் காண
பிரயத்தனப் படுவர்.

இடையால ஒருத்தன்
இல்லாத நாடொன்றில்
பிறையைக் கண்டதாய்
பேஷ் புக்கில் போட
போராளிக் கூட்டம்
புது வேகம் கொள்ளும்.

முன்னொரு காலத்தில்
மொசப்பத்தேமியாவில்
பின்னேரப் பொழுதிலும்
பிறையைக் கண்டயாம்
ஆராய்ச்சிக் கருத்துக்கள்
ஆளுக்காள் அனுப்ப
வட்ஸ் அப் வானில்
வாழ்த்துக்கள் பறக்கும்

டெய்லர் மாமா
டென்ஷன் ஆகி
பிறையே வராதே என
பிரார்த்தனை புரிய
புரொய்லர் யாவாரி
புலம்பிப் புலம்பி
பிறையைத் தேடுவார்
பின்னேரம் முதலே.

பாரு பிறை எண்டு
ஊருக்குச் சொல்லி
யாரும் கண்டதாக
எடுத்துச் சொன்ன பின்
இண்டைக்கு பிறை காண
எப்படியும் ஏலாண்ணு
குண்டக்க மண்டக்கயாய்
கொடுக்கின்ற பதிலால்
சண்டைகள் தொடங்கும்
சமூகம் சிதறும்.

தேசிய வானொலி
திடீரென அலறும்
உள் பள்ளி மைக்கு
'ஊ...' என்று கத்தும்
அப்புறம் பிறையை
ஆங்காங்கு கண்டதாய்
சொல்லும் போதே
செல்லம் சொல்லும்
"நாளைக்குப் பெருநாள்
நமக்கு நல்லம்
புள்ளைக்கு சட்டை
புரியாணிக்க முட்டை"

Post a Comment

0 Comments