Subscribe Us

header ads

கொத்தாந்தீவு காணி விவகார சர்ச்சைக்கு சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் முற்றுப்புள்ளி

கொத்தாந்தீவு காணி விவகார சர்ச்சைக்கு சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது...

நேற்று முந்தல் போலீஸ் நிலையத்தில் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மத்தியஸ்தம் வகிக்க நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் சர்ச்சைக்குள்ளான இரு குழுவினர் மற்றும் காணி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் ஆகியோர் சுமுகமான தீர்வினை எட்டினர்...

பெரும்பான்மை சகோதரர் ஒருவரின் காணிக்குள் இருந்த குழாய் அமைப்பினை எம்மவர்கள் சேதப்படுத்தி இருந்தபடியால் அதற்கான மொத்த செலவினையும் அலி சப்ரி அவர்கள் ஏற்று கொண்டதன் மூலம் அந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டது...

அத்தோடு இனி வரும் காலங்களில் முஸ்லிம்களின் காணிகளில் அத்துமீறி குடியேறுவதில்லை என்றும், மோட்டார் ரேஸ் வாகன இரைச்சல்கள் மூலமான தொந்தரவுகளை தவிர்ப்பதென்றும் இருபாலரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதோடு கைலாகு கொடுத்து ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்ததன் மூலம் தமது பழைய அந்நியோன்யத்தை புதுப்பித்துக் கொண்டனர்...

கரிசனையோடு இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட ACMC அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமுக்கு அங்குள்ள அனைவரும் நன்றி தெரிவிதக் கொண்டனர்..

Post a Comment

0 Comments