Subscribe Us

யாழ்ப்பாணத்தில் 150 கிலோ கடலட்டைகளுடன் ஒருவர் கைது (படங்கள்)

பாறுக் ஷிஹான்


150 கிலோ நிறையுடைய கடல் அட்டைகளை சட்டவிரோதமான முறையில்   தம்வசம் வைத்திருந்த நபரை   யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 இன்றைய தினம் (8)     யாழ்.பண்ணை பகுதியில் வைத்து குறித்த  கடலட்டைகள்   கைப்பற்றப்பட்டுள்ளதுடன்    சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி – நாச்சிக்குடா முழங்காவில் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குறித்த கடல் அட்டைகளை  விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையில்  இவ்வாறு   கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  தீவக பகுதியில்   இருந்து நாச்சிக்குடாவிற்கு  குறித்த அட்டைகளை  கொண்டு செல்ல குறித்த நபர் முயன்றுள்ளார்.


கைப்பற்றப்பட்டுள்ள 150 கிலோ கடல் அட்டைகளும் பல இலட்சம் பெறுமதியானவை என்பதுடன் கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதவான்   நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




இவ்வாறு  சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட  668 கடல் அட்டைகள்    யாழ் பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 அதிகாலை 2.45 மணியளவில்  யாழ் பொலிஸார் வீதிச்சோதனையின் போது இந்த கடலட்டைகள் சந்தேக நகருடன் மீட்கப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments