பாகிஸ்தானை சேர்ந்த நபரொருவர் பெண் போன்று வேடமிட்டு 11 வயது சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவமொன்று அனைவரின் மனங்களையும் கலங்கடித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் உள்ள முரூர் பகுதியில் இந்த சம்பவம் ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைக்குறிப்பில் இருந்து தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுவனான அஸான் மஜீத் கடந்த முதலாம் திகதி பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்ற போது காணாமல் போயிருந்தார், அன்று எவ்வளவு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை, அடுத்த நாள் ஜூன் இரண்டாம் திகதி சிறுவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
புலனாய்வு போலீசார் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் பலனாக சம்பவம் நடந்து நான்கு நாட்களின் பிறகான நேற்று
பாகிஸ்தான் நாட்டவரான கொலையாளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி பொலிஸ் டிரக்டரான மேஜர் ஜெனரல் மக்தூம் அல் சரீப் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இரக்கமில்லாது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உற்படுத்தி கொடூரமாக கொலை செய்ததற்காக கடுமையான தண்டனை வழங்கும்படி சைல்ட் பப்ளிக் ப்ரோசிகியூட்டர் போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.
- ரஸானா மனாப் -


0 Comments