Subscribe Us

கார்டூனில் வருவதைப் போன்று பத்தாவது மாடியில் இருந்து குடையுடன் குதித்த சிறுவன் ! தொலைக்காட்சி நிகழ்ச்சியால் வந்த விபரீதம்


கிழக்கு சீனாவில், ஜியாங் யூ சு மாகாணத்தில் சிறுவன் ஒருவர் கார்டூனில் வருவதைப் போன்று பத்தாவது மாடியில் இருந்து குடையுடன் குதித்துள்ளார்.
சுஹோ என்ற 7 வயது சிறுவனே இவ்வாறு பத்தாவது மாடியிலிருந்து குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜியாங் யூ சு மாகாணத்தில் சுஹோ என்ற சிறுவன் தனது பெற்றோருடன் குடியிருப்பின் 10 வது மாடியில் வசித்து வந்துள்ளார்.
தொலைக்காட்சியில் கார்டூன் படம் ஒன்றை பார்த்து கொண்டு இருந்த சிறுவன், அதில் ஹீரோ செய்யும் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
பின்னர் அந்த நிகழ்ச்சியில் வருவதைப் போன்றே குடையை பரசூட் என நினைத்து குடையுடன் 10ஆவது மாடியில் இருந்து குதித்து உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த குறித்த சிறுவனை உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், சிறுவர்கள் குறித்து பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments