புத்தளத்தில் வதியும் சிறந்த சாதனைப் பெண்களைத் தேடி இனங்கண்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கின்ற நிகழ்வொன்றுக்கு, புத்தளம் சேஞ்ச் தொண்டு நிறுவனம் தயாராகி வருவதாக, சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் திட்ட உதவியாளர் எம்.எப்.எப். வஹீபா தெரிவித்தார்.
இம்முயற்சியில் பொது மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கப்படுகின்றது. சமூகத்துக்காக அளப்பெரிய சேவைகள் செய்த பெண்களில் யாராவது இவ்விருதுக்கு தகுதியானவர் எனப் பொது மக்கள் கருதும் பட்சத்தில் அவரின் பெயரை விருதுக்காகச் சிபாரிசு செய்யலாம்.
புத்தளம், முந்தல், வண்ணாத்திவில்லு மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெண்களை மாத்திரம் பரிந்துரை செய்ய வேண்டும்.
சாதனை விருதுக்காக பிரேரிக்கப்பட்டவர்களின் பெயர்கள், அவர்களின் அனுமதியுடன், சேஞ்ச் தொண்டு நிறுவன Changepx Ngo எனும் பேஸ்புக்
பக்கத்தில் வாக்கெடுப்புக்காக விடப்பட்டு, அதிகூடிய வாக்குகளைப் பெறும் பெண், விருதுக்காகத் தெரிவு செய்யப்படுவார்.
பிரேரணை மற்றும் வாக்களிப்பில் ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம். ஒருவர், ஒருவரை மாத்திரமே பிரேரிக்க முடியும். பிரேரணைகளை சேஞ்ச் தொண்டு நிறுவனத்தின் பேஸ்புக் இன்பொஸ் செய்வதன் மூலமாக மேற்கொள்ளலாம்.
எதிர்வரும் 14ஆம் திகதிவரை, பிரேரணைக்கான காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி மாலை 5 மணி வரை வாக்கெடுப்புக்கான காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் அல்லது தவறியவர்கள், 21ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையான காலப்பகுதிக்குள் சேஞ்ச் தொண்டு நிறுவன காரியாலயத்தில் வாக்குகளைப் பதிவு செய்ய முடியும்.
0 Comments