(எம்.எஸ்.எம். ஸாகிர்)
அம்பாறை மாவட்ட சமூகசேவை அமைப்பான அட்சோ (ADSSO) நிறுவனம் நடத்தும் இலவச ஊடகச் செயலமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழைம காலை 09.00 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இச்செயலமர்வில் கலந்து கொள்ளும் முகமாக ஏற்கனவே தங்களது பெயர்களைப் பதிவு செய்தவர்களுக்கு இது பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைப்பின் செயலாளர் எம்.பி.எம். ரின்ஸான் நவமணிக்குத் தெரிவித்தார்.
ஊடகத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,கல்வியல் கல்லூரி பயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ளும் இச்செயலமர்வில் இதுவரை தமது பெயர்களைப் பதிவுசெய்யத் தவறியவர்கள்0777-666 366, 077- 209 35 44 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்யமுடியும் என்றும் தெரிவித்தார்.
இச்செயலமர்வைத் தொடர்ந்து இலவச பாடநெறி நடத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும் வழங்கப்படவுள்மை குறிப்பிடத்தக்கது.
0 Comments