Subscribe Us

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவை (YMMA) - புத்தளம் மாவட்ட கிளை



அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவை (YMMA) - இது 1950 ம் ஆண்டு Dr.A.M.A. அஸீஸ் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சமூக சேவை சார் நிறுவனமாகும் . இலங்கை நாடு முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட கிளைகளை கொண்ட இந்த அமைப்பு கல்வி , வாழ்வாதாரம் , விளையாட்டு , இளைஞர் வலுவூட்டல், உலர் உணவு விநியோகம்,சுகாதாரம் என்று பலதரப்பட்ட அம்சங்களை சுமந்து பயணிக்கிறது . இது முத்திரை பதித்த இடங்களில் நமது புத்தளம் மாவட்டமும் ஒன்று . இதன் புத்தளம் மாவட்ட பணிப்பாளராக M.T.M.நபீல் அவர்கள் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அமைதியாக இடம்பெறும் இந்த அமைப்பின் சேவைகளை விரிவாக்கம் செய்யவும் , வேகமாக இயங்கும் நோக்கிலும் புதிய நிர்வாகிகள் இன்று தெரிவு செய்யப்பட்டார்கள் . 2017 ஆம் ஆண்டுக்கான சகல விடயங்களையும் இவர்களே கையாளுவார்கள் . >பணிப்பாளர் -M.N.M.நபீல் >தலைவர் - அல்ஹாஜ் S.R.M.முஹ்ஸி, > உப தலைவர்- S.L.அன்வர், >செயலாளர்- M.முஜாஹித் நிஸார், >உப செயலாளர்- M.A.M.அஸாருதீன், >பொருளாளர்- A.L.M.அஸாரூக் >கல்வி விவகாரம் - M.H.இதாப், >சுகாதார மேம்பாடு - S.R.M. முபாஸ், >இளைஞர் மேம்பாடு -M.I.M.இன்பாஸ், >ஊடக பொறுப்பு -S.A.M.ஹஸன், > விளையாட்டு பிரிவு - R.M.பஸ்லின், >உறுப்பினர்களாக- M.I.M.சமீர், M.I.M. அல்பர், S.M.இபாம். ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இதன் கிளைகள் புத்தளம் மாவட்டம் முழுக்க அமைக்கப்பட்டு பல்வேறுபட்ட மக்களுக்கும் சேவைகளை வழங்க வேண்டும் எனும் திட்டம் இன்று எடுக்கப்பட்டது .

Post a Comment

0 Comments