கவலைப்படாதே தலைவா! ஹக்கீமே! புத்தளம் புத்துயுர் பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாத முகநூல் கோழைகள் உன் பேச்சை விமர்சிக்கிறார்கள் . வீருநடை போடு தலைவா! இன்று புத்தளம் நம் கையில், நாளை புதுத்தளமாகும் என்ற நம்பிக்கையில்... கவலைப்படாதே தலைவா! பித்தளையில் ஊழல்செய்தவர்களும், புத்தளத்திலும் ஊழல் செய்ய நினைத்தவர்களுமே உன்னை விமர்சிக்கிறார்கள். கவலைப்படாதே தலைவா! புதிதானவையா இந்த விமர்சனங்கள் உனக்கு? மன்னார் நீதிமன்ற பிரச்சினையில் விமர்சித்த விசமிகளே இவர்கள். தர்கா டவுன் பிரச்சினையில் விமர்சித்த வித்துவான்களே இவர்கள்.தம்புள்ளை பள்ளிவிடயத்தில் விமர்சித்த வீண்பலிக்காரர்களே இவர்கள். கவலைப்படாதே தலைவா! இவர்களது விமர்சனங்களால் இவர்கள் சாதித்ததுதான் என்ன? சாதிக்கப்போவதுதான் என்ன? சாதித்தது வெறும் பாவங்களையே, அவர்களை நீ மன்னி அப்போதுதான் இறைவன் அந்தக்கோழைகளை மன்னிப்பான். ஏழைப்பசியரியாதவன் என்கிறார்கள் உன்னை.. ஏழைகளை காட்டி பணம் சம்பாதித்தவர்கள். அகதிகள் மீது அக்கறையற்றவன் என்கிறார்கள் உன்னை.. அகதிகளை காட்டி அனுதாபம் தேடியவர்கள். சமூக அக்கறை அற்றவன் என்கிறார்கள் உன்னை.. சமூக பிளவுக்கு காரணமானவர்கள். அஷ்ரபை வைத்து அரசியல் லாபம் தேடுபவன் என்கின்றனர் உன்னை.. அஷ்ரபின் வாடையைகூட நுகராதவர்கள். மரத்தைக்காட்டி வாக்கெடுப்பவன் என்கின்றனர் உன்னை.. மயிலைக்காட்டி வாக்கெடுக்க வக்கற்ற கோழைகள். கவைலைப்படாதே தலைவா! இவர்களது விமர்சனங்களால் என்ன செய்ய முடிந்தது? இறைவன் நம்பக்கம், இறைவிசுவாசிகளும் நம்பக்கம், ஏன் இளம் போராளிகளும் நம் பக்கமே .. பணவியாபாரிகளும் பதவி மோகம் கொண்டவர்களுமே அந்தப்பக்கம். கவலைப்படாதே தலைவா! மயிலாட்டம் ஒருநாள் ஓயும். மரவிருட்ஷம் பலமடங்காய் ஓங்கும். காத்திரு தலைவா! மயிலாட்டத்தால் மதிமயங்கிப்போய் கிடக்கும் அப்பாவிகள் புத்திதெளிந்து புனிதமிகு மரநிழல் தேடிவருவார்கள்.காத்திரு தலைவா! பதவிகளால் பாசம் மறந்த பாமரர்கள் உன்பாசத்துக்காய் பாதம் தேடி வருவார்கள். இன்றுபோல் அன்றும் நாமிருப்போம் உன்னோடு அன்பான போராளிகளாய்....
Sifas Nazar- B.A REDG LLB. தலைவர், உயர்கல்வி மாணவர் அமைப்பு.


0 Comments