கல்வி அமைச்சின் சுற்றுநிருபமானது ஒவ்வொரு ஞாயிறு தினங்களையும் தத்தமது மதம்சார்பான விடயங்களை மாணவர்கள் பயில வேண்டும் என்பதற்காகவே தனியார் நிறுவனங்கள் பிரத்தியோக வகுப்புக்களை நடாத்த தடைவிதித்திருப்பதோடு அன்றைய தினத்தில் மதம்சார் விடய செயற்பாடுகளுக்காக பாடசாலை வளத்தினை பயன்படுத்த அனுமதியளித்திருப்பதாகும். அதனடிப்படையில்தான் முஸ்லிம் பாடசாலைகளில் அஹாதிய்யா பாட வகுப்புக்கள் ஒழுங்கு செய்யப்பட்டு காலை8.30மணி தொடக்கம் மதியம் 11.30 மணி வரை நடாத்தப்பட்டு வருகின்றன. துரதிஷ்டம் என்னவெனில் கற்பிட்டி பிரதேச மாணவர்கள் அஹதிய்யா வகுப்புக்களை புறக்கனித்து சட்டவிரோதமாக நடாத்தப்படுகின்ற தனியார் வகுப்புக்களுக்கு காட்டுகின்ற முனைப்பும் அதற்கிருக்கின்ற பெற்றொர்களின் ஆதரவும் ஆகும். (தனியார் வகுப்புக்கு முக்கியமளிப்பதற்கான காரணங்களை பிரிதொரு இடத்தில் தரக்காத்திருக்கிறேன்) அன்பின் பெற்றோர்களே! எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு கிடைத்திடாத பாக்கியம்தான் இலங்கையில் மதம்சார் கல்வியினை பகிரங்கமாக பயிலுகின்ற நிலையாகும். முஸ்லிம் பாடசாலைகள் பெயரளவில் முஸ்லிம் பாடசாலைகளாக இருந்துவிடாமல் இஸ்லாமிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் சிந்தித்த முன்னோர்களின் தியாகம்தான் இந்த அஹதிய்யா பாடசாலைகளாகும். ஆனால் நாமோ இன்று அவற்றை உதாசீனம் செய்கின்றவர்களாக மாறியிருக்கிறோம். நாமே அவற்றை அழிக்க நினைக்கின்றோம். ஒவ்வொரு பெற்றோரும் இது தொடர்பாக விசாரிக்கப்படுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர். தனியார் வகுப்புக்களை புறக்கனியுங்கள் என்று கூற எத்தனிக்கவில்லை கிடைக்கப்பெற்ற பாக்கியத்தை உதரித்தள்ளாதீர்கள் என்றே கூற வருகிறேன். பாடசாலை நிர்வாகமே, பழைய மாணவ சங்கமே,பாடசாலை அபிவிருத்திக்குழுவே 3000 ற்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பாடசாலையில் வெறும் 100 கணக்கான மாணவர்களே அஹதிய்யா வகுப்புகளுக்கு செல்லுகின்றனர் என்ற செய்தியாவது உங்களுக்கு தெரியுமா? ஞாயிறு தினங்களில் பாடசாலையில் என்ன நடக்கிறது என்பதையாவது பார்த்ததுன்டா? மறந்துவிடாதீர்கள் மௌத்துக்குப்பின்னர் நிங்களும் நானும்தான் இந்நிலைக்கு பொறுப்புச்சொல்ல கடமைப்பட்டவர்ரகள்.. -Sifas Nazar- தலைவர், உயர்கல்வி மாணவர் அமைப்பு(HSPA) , கற்பிட்டி.


0 Comments