நாடு முழுவதுமுள்ள வைத்தியர்கள், இன்று புதன்கிழமை (30), பணிபகிஷ்கரிப்பை
முன்னெடுத்துள்ளனர். காலை 8 மணிமுதல் 24 மணித்தியாலங்களுக்கு
பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று
தெரிவத்திருந்தது.
2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
அவசர சிகிச்சைப் பிரிவு மாத்திரம் செயற்பாட்டில் இருக்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
மகளிர் வைத்தியசாலை, சிறுவர் வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு ஆகியவை வழமைபோல இயங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, தனியார் வைத்திய நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, முன்னெடுக்கப்படுகின்ற வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
வேலை நிறுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முழுமையான பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் அரச மருத்துவ அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை துரதிஷ்டவசமானது என்று சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 Comments