Subscribe Us

70 வது ஆண்டை பூர்த்தி செய்தது அல் அக்ஸா தேசிய பாடசாலை... அல் அக்ஸா பிறந்த கதை



 பல சாதனைகளையும், வெற்றிகளும் தனகத்தே தாங்கி இன்றுடன் 70 70 வது ஆண்டை பூர்த்தி செய்தது அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு எமது வாழ்த்துக்கள்...
முஸ்லிம்களின் சமய, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து இஸ்லாமிய அடிப்படையில் அமைந்த ஒரு பாடசாலை கற்பிட்டிக்கு தேவை என்ற கருத்து நெடுங்காலமாக கற்பிட்டியின் முக்கிய புள்ளிகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுவந்தது, எனினும், தேவையான மாணவர் தொகை, கட்டடம், தளபாட வசதி, ஆளணி என்பவற்றை காரணம் காட்டி அதற்கான முயற்சிகள் யாவும் கிடப்பில் போடப்பட்டன.
                    அப்போது கற்பிட்டி கிராம சபை தலைவராக இருந்த மர்ஹூம் M.M. மதார் மரைக்கார் அவர்கள்  தனது முயற்சியிலிருந்து பின்வாங்காமல் அப்போது கொழும்பில் பரிஸ்ட்டராக கடமையாற்றிக்கொண்டிருந்த மர்ஹூம் M.H.M. நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் புத்தளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், நிதி திட்டமிடல் அமைச்சர்) அவர்களின் மூலமாக‌ மர்ஹூம் T.B.ஜாயா அவர்களை அணுகி அவரின் மூலமாக கல்வியமைச்சருக்கு முஸ்லிம் பாடசாலையின் அவசியம் பற்றி உருக்கமாக எடுத்து காட்டினார்.
              
இம்முயற்சிகளின் பலனாக,
                
01.09.1946   -
இரு மொழி பாடசாலையொன்று ஆரம்பிக்க அனுமதி  கிடைத்தது
02.09.1946   - 
கற்பிட்டியில உத்தியோகபூர்வற்ற பாடசாலை ஆரம்பம்.         
அதிபர்        -  மர்ஹூம் S.M.S.அஹ்மத்,
 
முதல் மாணவர் -  K.M.ஹனிபா- முன்னாள் பட்டினசபை தலைவர் (திரு.நௌசாத,திரு.ஆசாத்,திரு.நாசர் ஆகியோரின் தகப்பனார்)

 
இடம்   -  செட்டி வீதியிலுள்ள ஹாஜியார் அப்பா  குடும்பத்திற்கு சொந்தமான வீடு ( ஒரு வீடு தற்போது ஜனாப், வாஹித் ஆசிரியர் வசிக்கும் வீடு, மற்றையது திரு. அருஸ் ஆசிரியரின் வீடு இருக்கும் இடத்தில் இருந்ததாக அறிய முடிகிறது) இவ்வீடுகளானது மர்ஹூம் M.M. முஹம்மது இஸ்மாயில் மரைக்கார் அவர்களால் 7 வருடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு அதற்கான சாசனம் அப்போதைய வாக இருந்த திரு.சாமுவேல் தம்பையா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

20.09.1946   -  
கல்வியமைச்சிலிருந்து GS/SF/A கடிதப்படி இருமொழிப்பாடசலை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்தது.
22.11.1946   - 
உத்தியோகபூர்வமாக கற்பிட்டி கனிஷ்ட பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
          
ஆரம்ப விழா ஏற்பாடுகள் மர்ஹூம் நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் நிதி திட்டமிடல் அமைச்சர்) அவர்களால் முன்னின்று செய்யப்பட்டது.
முதல் அதிபர் -திரு.K.S.  சுப்ரமணியம்
ஆசிரியர்கள் -  திரு. K.கணபதிப்பிள்ளை, திரு. V.தில்லையம்பலம், செல்வி, C.செல்லைய்யா, மௌலவி, K.M.M.ஹனிபா
                
தமிழ்மொழிப்பிரிவில் 130 மாணவர்களும் இரு மொழிப்பிரிவில் 45 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

Post a Comment

0 Comments