Subscribe Us

டான் பிரியசாத் நவம்பர் 29 வரை விளக்கமறியலில்...


இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் “டான் பிரியசாத்” என அழைக்கப்படும் தெமட்டகொட சுரேஷ் பிரியசாத் எனும் நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வாக்குமூலமொன்றை பதிவு செய்யவந்த வேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நபரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments