Mohamed Nizous
கட்டி ஆண்ட அம்மா
கட்டிலுக்கு ஆனாங்கம்மா
கொட்டி கொட்டி செலவழித்தும்
குணம் கிடைக்கவில்லையம்மா
எப்பலனும் கிடைக்கவில்லை
இன்னும் சுகம் ஆகவில்லை
அப்பல்லோ அறிக்கை விட்டே
அப்பப்ப நழுவுகிறது.
தாய்க் கிளி வாடுவதால்
தாளாத சோகத்தில்
தீக்குளிக்கப் பாய்கின்றார்
திராவிடத் தொண்டர்கள்.
வாத்தியார் சேர அன்று
வாத்தியத்துக்காடியவர்
வைத்தியம் சோர இன்று
வைத்திருக்கார் மனதில் உறுதி.
தமிழச்சி தருகின்ற
தடாலடிச் செய்திகளால்
தமிழச்சு ஊடகங்கள்
தடுமாறி நிற்கின்றன.
அ இ அ தி மு க
அம்மா இப்போது
அப்பலோவில் திணற
முனங்கும் கட்சியாகி
பிணங்கி நிற்கிறது.
இக்கட்சி இக்காட்சி
இரண்டிலும் பாடம் உண்டு.
எக்கணமும் வாழ்க்கை மாறும்
எல்லாமே தற்காலிகம்.


0 Comments