Subscribe Us

ஆசிரியர் தினம்!!! எம்.எச்.எம் முன்திர்


விழிகளை மூடி
வினயமாய் விழிக்கிறேன் ..
ஒளி பெற்ற வாழ்வுக்கு
வழி கற்ற  வரத்திற்காய்..!

குருக்களுக்காய்
இத்தரணியில்
பரணி பாட - சர்வதேசம்
வகுத்த தினமாம் இன்று..      
நன்றி  நவிழல் இறை உவப்பாம் ...
இறை வரமாய்-கல்விக்கரைக்கு
கரம் பிடித்து
வாழ்வின் கறையகற்றிய
ஆசான்களே...

வியத்தகு விந்தைகள் விதைப்பவர்களை- விதைத்தவர்கள் தங்களை..
நித்தம் வாழ்த்தும்
நயத்தகு வார்த்தைகளால்
நானும் வாழ்த்துகிறேன்..
நீடு காலம் வாழ்கவென..

வறுமைக்குள் மறைந்திருந்த திறமையை..
சிறுமைக்குள்
ஒழிந்திருந்த பொறுமையை
 தரப்படுத்தி...
வாசிப்பில் நேசிப்பும் ,
வாழ்வுதனில் பூசிப்பும்
மிளிர..
அரி ஆசனம் ஏற்றி
சரி ஆசனம் தந்த பெருந்தகை ஆசான்களை
சிறுந்தகையுடைய நான்
வாழ்த்துகிறேன் ..
நீடு காலம் வாழ்கவென..
    
என்றும் உண்மை மாணவன்
              எம்.எச்.எம்  முன்திர்

Post a Comment

0 Comments