Subscribe Us

தமிழ் மக்களின் சமஷ்டி கோரிக்கை அலட்டிக்கொள்ள தேவையில்லை..

இன்றை இலங்கை அரசியல் மேடைகளில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கின்ற விடயமே தமிழ்மக்களின் சமஷ்டிக் கோரிக்கையாகும். அண்மையில் வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரனை மேலும் இவ்விடயத்திற்க்கு வலுவூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும். உண்மையில் சமஷ்டி என்பதன் யதார்த்தம் அல்லது வரைவிலக்கணம் தெரியாததன் வெ ளிப்பாடும் ஒரு சில குறுகிய அரசியல் வாதிகளின் வங்குரோத்து அரசியலுமே சமஷ்டி என்ற எண்ணக்கருவை கசப்பான ஒரு விடயமாக அனைவரது உள்ளத்திலும் உதிக்கச்செய்திருக்கிறது. 

முதலில் சமஷ்டி என்பதன் அர்த்தம் யாதெனில் இது ஒரு அதிகார பகிர்வினை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறைமையாகும்.அதாவது ஒரு நாடு மத்திய, மாநில அல்லது மாகாண அலகுகலாக பிரிக்கப்பட்டு அந்நாட்டின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அலகுகலுக்கும் பிரித்தொதுக்கப்பட்டு வழங்கப்படுவதையே சமஷ்டி (Federalism) என்பர். இவ்வாட்சிமுறைக்கு சிறப்பாக விளங்குகின்ற நாடு அமேரிக்காவாகும். அவ்நாட்டில் மத்தியரசொன்றும் 50 மாநில அரசுகளும் உருவாகக்கப்படு அதிகாரமானது மத்தியப்பட்டியல் என்று மத்தியரசாங்கத்திற்கே உரித்தான அதிகாரங்களையும்மாநிலபட்டியல் என்று மாநில அரசுகளுக்குறிய அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிரு.பதோடு ஒருபோதும் மத்திய பட்டியலில் மாநில அரசோ மாநில அதிகாரத்தில் மத்தியரசோ தலையிடுவதில்லை.மேலும் அந்நாட்டுப் பிரஜைகள் தம்மை மாநில பிரஜைகளாகவும் அமெரிக்க பிரஜைகளாகவும் கொள்ளும் வகையில் இரட்டை பிரஜாவுரிமை வ ழங்கப்பட்டிருக்கின்றமை சிறப்பான அரசியல் கலாச்சாரத்தை காட்டிநிற்க்கின்றது.அதுமட்டுமில்லாமல் ஒருகாலத்தில் பிரித்தானிய காலணித்துவத்தின் கீழ் இலங்கை போன்று இருந்த நாடே அமெரிக்கா ஆகும். 
என்றாலும் இன்றைய உலகவல்லரசாக மாறி தன்னை தனிப்பெரும் ராஜ்ஜியமாக நிலைநிறுத்த காரணம் இவ்சமஷ்டி ஆட்சி முறையே என்பது எம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்? அமெரிக்கா போன்று அயல் நாடான இந்தியாவில் அதிகார பகிர்வு இல்லையானாலும் மாநில அரசுகளுக்கு ஓரளவு சுயாட்ச்சியை வழங்கியிருப்பதனால் இந்தியாவை பாதிச்சமஷ்டி நாடு(Quazi federalism)  என்பர். உண்மையில் இலங்கை அதிகார போட்டிக்காக சுமார் 30 ஆண்டுகளை தொலைத்துவிட்ட நாடாகும். தனி நாடு கேட்டு போராடிய தமிழ்த்தரப்பு அதிகார பகிர்விற்காய் மத்தியரசின் காலடிதேடி வந்திருக்கும் காலம் கனிந்திருக்கின்றது. சில சிறப்பான சனநாயாக பண்புகளையே சமஷ்டியும் கொண்டிருக்கின்றது என்றாலும் சமஷ்டி ஆட்சிமுறைக்கு எதிரான போக்கினை SLFP, JVP, JATHIKA HELA URUMAYA போன்ற பெரும்பான்மை அரசியல் கட்சிகள் கொண்டுள்ளன.இனவாதிகள் சமஷ்டி யினை நல்லாட்சி அரசு வழங்கி நாட்டை பிரிக்க போவதாக தவறான கதைகளை பரப்புகின்றனர். இத்தனைதடைகளையும் மீறி நல்லாட்சி அரசு அமெரிக்க முன்மாதிரியினை பின்பற்றி தமிழர்களுக்கு சமஷ்டி யினை பரிசளிக்குமா?  அல்லது ஒற்றையாட்சிக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண எத்தனிக்குமா? முடிவு அரசியல் திட்ட யோசனையின் நிறைவேற்றத்தில் விளங்கும்.                         
-Sifas Nazar B.A, REDG LLB.

Post a Comment

0 Comments