Subscribe Us

சுங்க கட்டளைச் சட்டம் அடுத்த வருடம் பாராளுமன்றத்தில்

 
 
அடுத்த ஜனவரி ஆரம்பத்தில் சுங்க கட்டளைச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் பொருட்டு அடி மட்ட மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரவி கருணாநாயக்க இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(அத தெரண தமிழ்)

Post a Comment

0 Comments