Subscribe Us

42 ஆவது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்-பிரதி அமைச்சர் ஹரீஸ் பங்கேற்பு

சமாதானமும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும்' எனும் தொனிப்பொருளில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று( 29 ) மாலை  யாழில்  ஆரம்பமாகியது.

குறித்த தேசிய விளையாட்டு விழாவினை பாராளுன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய  விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர   விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்  வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்டோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
 
2016 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவினை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன் இன்று மாலை இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தினம் (29 )ஆரம்பமாகி இத்தேசிய விளையாட்டு விழா 30 மற்றும் ஒக்டோபர் 01 ஆம் 02 ஆம் திகதிகளாக 4 நாட்கள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும்.

இந்த தேசிய விளையாட்டு விழாவில் ஆரம்பத்தில் அதிதிகள் அழைத்து வரப்பட்டு தேசிய கீதம் இசைக்கபட்டு தேசிய கொடி உள்ளிட்ட ஏனைய கொடிகள் ஏற்றப்பட்டன.

தொடர்ந்து நாடளாவிய ரீதியில் இருந்து அதிகளவான வீர வீராங்கனைகள் இங்கு பங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

குறித்த தேசிய விளையாட்டு விழாவில்  இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளனர்.

மேலும்  இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  வட மாகாணசபை உறுப்பினர்கள் ,  வட மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டுள்ளனர்.
 




 

Post a Comment

0 Comments