( பாறுக் ஷிஹான்)
'வீட்டுக்கு வீடு மரம்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரம் நடுகை திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இன்று புதன்கிழமை(3) காலை சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலில் பாடசாலை வளாகத்தில் நான்கு பயன்தரு மரங்கள் நடப்பட்டன.
இன் நிகழ்வில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் எம்.அஸ்ரப் ஆசிரியர் எம்.றிஸ்வி யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத் தலைவர் ஜமால் முகைதீன் சமூக சேவகர்களான எம்.நஜீர் அனஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மர நடுகை பின்னர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











0 Comments