Subscribe Us

சாதாரணத்தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான ஓர் நற்செய்தி!!: வாய்ப்பை தவறவிடாதீர்கள்...


பெருந்தோட்ட தொழிலாளர்களைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து இந்திய அரசாங்கம், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் பயில்பவர்களுக்காகவும், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி மற்றும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு இந்த புலமை பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சி தர சித்திகளை அல்லது உயர்தரத்தில் பயிலும் 25 வயதுக்கு குறைந்தவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்கமுடியும்.

இதற்கான விண்ணப்பங்களை www.hcicolombo.org  என்ற இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யமுடியும் என்றும், இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த விண்ணப்பங்களை கண்டி பிரதி இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை, அஞ்சல் பெட்டி இலக்கம் 882, கொழும்பு 3 இல் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கு ஒகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments