கல்வியமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றுடன் கூட்டினைந்து Double A நிறுவனம் முன்னெடுத்த பூலோகத்தில் நண்பன் (friends of the planet ) செயற்திட்டத்தில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியாக மூண்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது .
மண்புழுவால் மாற்றத்திற்கான ஓர்அழைப்பு என்ற தலைப்பில் பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய விவசாயத்துறை மாணவர்கள் மண்புழுவைப் பயன்படுத்தி திரவப் பசளையை தயாரித்துள்ளனர் இது தொடர்பாக கல்வியமைச்சில் முதல் கட்டமாக நடைபெற்ற போட்டியில் 297பாடசாலைகள் பங்குபற்றி அதில் 7 பாடசாலை தெரிவு செய்தனர் அப்பாடசாலையில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலையாக பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலம் தெரிவாகியது குறிப்பிடத்தக்க விடயமாகும் .இவ் 7 பாடசாலையையும் செயற்பாட்டு ரீதியாக ஈடுபடச் செய்வதற்கான கால அவகாசம் 3 மாதங்கள் வழங்கப்பட்டது .
இக்காலங்களில் இவர்களது செயற்பாட்டு அடிப்படையினைப் பார்வையிட்டு தரப்படுத்துவதுடன் இறுதியான முன்வைப்பு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அன்மையில் நடைபெற்றது .முதலாம் இடத்தினை மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர் கல்லூரியும் ,இரண்டாம் மயுரபாத மத்திய கல்லூரியும், மூன்றாம் இடத்தை பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டது .இதற்காக இரவு பகலாக அயராது உழைத்த மாணவர்களுக்கும் பொறுபாசிரியர் எஸ் சுப்ரமணியம் அதிபர் எம் எச் எம் ஹமீட் ஹான் அவர்களுக்கும் பழையமாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்





0 Comments