பைஷல் இஸ்மாயில் -

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நகரில் சுமார் 39 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டடத்தை  ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 3.30 மணியளவில் திறந்து வைத்தார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் அப்துல்லா மஹ்ரூப் எம்.பி.தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட, மு.காவின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.