Subscribe Us

புத்தளத்தில் வரவேற்பை பெற்ற புட்சால் கால்பந்தாட்ட போட்டி - படங்கள்


புத்தளம் வரலாற்றில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு முதன் முறையாக கால்பந்தாட்ட வீரர்களுக்கான முற்றிலும் வித்தியாசமான புட்சால் விளையாட்டுப்போட்டி ஒன்றினை Silent Volunteer சமூக அமைப்பு ஒழுங்கு செய்தது.

புத்தளம் கடற்கரை கரப்பந்தாட்ட மைதானத்தில் நேற்று ஆரம்பமான முதற்கட்ட இத்தொடரில் பெருமளவிலான கால்பந்தாட்ட ரசிகர்களும், அணிகளும் பங்குபற்றியிருந்தன.

இச்சுற்று போட்டிக்கு Zoom Karting அனுசரணை வழங்கிய அதேவேளை தொடரில் முதலிரு போட்டிகளில் வெற்றிபெற்ற அணியினருக்கு ஒவ்வொரு போட்டி முடிவிலும் 1000/- பரிசு தொகை வழங்கி வைக்கப்பட்டது.

ரெட் புல் நிறுவனத்தினால் கத்தார் நாட்டில் நடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட தொடரின் மாதிரியாக இவ்விளையாட்டு தொடர் அமையும் அதேவேளை கத்தார் நாட்டில் நடாத்தப்படும் விளையாட்டு போட்டிகளின் மாதிரிகள் புத்தளம் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(MAB Wasim Akram)





Post a Comment

0 Comments