– மந்தரீஸ் –
இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி மிகவும் போட்டித் தன்மை உள் ளது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருடாந்தம் க.பொ.த. உயர் தரத்தில் தோற்றும் சுமார் 3 இலட்சம் மாணவர்களில் 1 இலட்சம் பேர் சித்தியடைகின்றனர். அதாவது பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதி பெறுகின்றனர். அவர்களில் பல்கலைக்கழக நுழைவு பெறுபவர்களின் எண்ணிக்கை வெறும் 25,000 ஆகும். நடப்பு ஆண்டிலேயே இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்னர் 15,000 பேரிலிருந்து வருடாந்தம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போதே இத் தொகைக்கு வந்துள்ளது.
இதன் மூலம் இலங்கையின் பல்க லைக்கழகங்களில் மாணவர்கள் நுழைவு அனுமதி பெறல் மிகுந்த போட்டித் தன்மை உள்ளது என்பதை உணரலாம். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தப்பட்ட பல்கலைக்கழகச் சட்டத் தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்பவே பல்கலைக்கழக அனுமதி முறை பின்பற்றப்படுகின்றது. 1978 ஆம் ஆண்டின் சட்டத்தின்படியே இலங்கை யில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இதுவே தற்போது மாணவர்களுக்கு நுழைவு அனுமதியை வழங்கி வருகின்றது.
1978 சட்டத்தின்படி இலங்கையில் 14 அரச பல்கலைக்கழகங்களுக்கும் 3 வளா கங்களுக்கும் 5 நிறுவனங்களுக்கும் பட்ட படிப்பிற்காக மாணவர்கள் அனுமதிக் கப்படுகின்றனர். இதே சட்டத்தின் பிர காரம் ஸ்தாபிக்கப்பட்டதே இலங்கை திறந்த பல்கலைக்கழகமாகும். இது தொலைக்கல்வி முறைமைகளைப் பாவி த்து பல்வேறு வகையான கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது.
திறந்த பல்கலைக்கழக கற்கைநெறி களுக்கான அனுமதித் தேவைகள் மற்றும் விண்ணப்பங்கள் நாவலயில் உள்ள திறந்த பல்கலைக்கழக பதிவாளரிடமி ருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது தவிர பின்வரும் நிறுவனங்களினால் வழங்கப்படும் கற்கைநெறிகளுக்கு பல் கலைக்கழக மானியங்கள் அணைக்குழு வின் வழிகாட்டலின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினாலேயே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
மனித வள மேம்பாட்டு நிறுவனம் – கொழும்புப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்ப நிறுவகம் – மொரட்டுவை பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள அனைத்துப் பல் கலைக்கழகங்களும் அதனோடு இணை ந்த நிறுவனங்களும் 92 இற்கும் மேற் பட்ட பட்டப் படிப்புசார் கற்கைநெறி களை வழங்குகின்றன. பட்டப் படிப் புக்கான அனுமதியானது பின்வரும் தகைமைகளின் அடிப்படையில் மேற் கொள்ளப்படுகின்றது.
- க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் அடிப்படையில் மாணவர்கள் பெற்ற Z புள்ளிகளின் தர வரிசை அடிப்படையில் மாணவர் அனுமதி மேற்கொள்ளப்படு கின்றது.
- மேற்படி பரீட்சையில் 3 அமர்வு களுக்குள் 3 அங்கீகரிக்கப்பட்ட பாடங்க ளிலும் ஒரே தடவையில் குறைந்தது சாதாரண சித்தி (S) பெற்றிருத்தல் வேண் டும்.
- பொது வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30 வீதம் புள்ளிகள் பெற்றி ருத்தல் வேண்டும். (பொது வினாத் தாளில் 30 வீத புள்ளிகளைப் பெறாதோர் அதற்கு முந்திய தடவை பரீட்சையில் அதைப் பூர்த்தி செய்திருப்பின் அல்லது க.பொ.த உயர் தரப் பரீட்சையின் 3 தட வையிலான காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்திருப்பின் அவரது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கருத்திற் கொள்ளப்படும்.
பல்கலைக்கழகம் மாணவர்களை அனுமதிப்பது பின்வரும் இரட்டை முறையில் நடைபெறுகின்றது.
- தீவலாவிய திறமை (Island Wide Merit)
- மாவட்ட ஒதுக்கீடு
தீவளாவிய திறமையின் அடிப்படை யில் Z புள்ளி வரிசை ஒழுங்கில் 40 வீத நுழைவு மேற்கொள்ளப்படுகின்றது. மாவட்ட ரீதியான ஒதுக்கீடுகளின்படி 55 வீத நுழைவு அனுமதி மேற்கொள்ளப் படுகின்றது. அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் சம்பந்தப்பட்ட மொத்த மாவட்டமானது கொண்டுள்ள சனத்தொகையின் வீசாதாரப் படி 25 மாவட்டங்களுக்கும் நுழைவு அனுமதி ஒதுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள இடங்களில் 5 வீத விஷேட ஒதுக்கீடு பின்தங்கிய 16 மாவட்டங்களுக்கு அவற்றின் சனத்தொகை வீதாசாரப்படி வழங்கப்படுகின்றது. அம்மாவட்டங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
- நுவரெலியா
- ஹம்பாந்தோட்டை
- யாழ்ப்பாணம்
- கிளிநொச்சி
- மன்னார்
- முல்லைத் தீவு
- வவுனியா
- திருகோணமலை
- மட்டக்களப்பு
- அம்பாறை
- புத்தளம்
- அனுராதபுரம்
- பொலன்னறுவை
- பதுளை
- மொனராகலை
மாவட்ட ரீதியிலான இடஒதுக்கீடுகள் மாவட்ட ரீதியிலான Z நிரலின் வரிசைப்படி நிரப்பப்படும்.
இருந்தபோதும் கலைப்பிரிவு கற்கை நெறிகளான கலை, கலை (SP), கலை
(SAB) தொடர்பாடல் கற்கைகள் (Communication Studies), சமாதானமும் முரண் பாட்டுத் தீர்வும் (Peace and conflict Resolution), இஸ்லாமிய கற்கைகள், அறபு மொழி என்பவற்றுக்கான அனுமதி கள் நாடளாவிய திறமை அடிப்படை யில் வழங்கப்படும்.
பரீட்சார்த்திகளின் மாவட்டங்களைத் தீர்மானித்தல்
பல்கலைக்கழக அனுமதி நோக்கங்க ளுக்காக ஒரு பரீட்சார்த்தியின் மாவட்டம் பின்வருமாறு நிர்ணயிக்கப்படும். ஏதா வது ஒரு விண்ணப்பதாரி பல்கலைக்கழக அனுமதிக்காக தகைமை பெறுவதற்கு க.பொ.த. உயர் தரப் பரீட்சை நடை பெற்ற மாதத்திற்கு முந்திய மாதத்தின் கடைசி நாளன்று முடிவடையும் 3 வருட காலத்தின்போது ஆகக் கூடுதலான நாட்கள் அவர் சேர்ந்துள்ள பாடசாலை அமைந்துள்ள மாவட்டமே அவரது மாவட்டமாகக் கருதப்படும்.
உதாரணமாக, 2014 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சை எழுதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒரு மாணவரை எடுத்துக் கொண்டால், அவர் 2014 ஆம் ஆண்டு ஜூலை 31 இல் முடிவுறும் 3 வருடங்களை 2011 ஓகஸ்ட் 1 தொடக்கம் 2014 ஜூலை 31 வரை அம்பாறை மாவட்டத்தில் கல்வி கற்றிருப்பார் எனின், அவரது பல்கலைக்கழக அனு மதிக்கான மாவட்டமாக அம்பாறை மாவட்டமே கருத்திற் கொள்ளப்படும். அவர் க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்காக மட்டகளப்பு மாவட்டத்தில் தோற்றி யிருப்பினும் அனுமதிக் கொள்கையின் படி அவரது மாவட்டமாக அம்பாறை மாவட்டமே கொள்ளப்படும். இது பாட சாலை பரீட்சாத்திக்கு மட்டுமன்றி, தனிப் பட்ட பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும்


0 Comments