Subscribe Us

புத்தளம் பெரிய பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - ஆணைக்குழுவின் முதல் அமர்வு


புத்தளம் பெரிய பள்ளிவாசலில் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் முறைப்பாடுகளை ஆராயும் ஆணைக்குழு தமது முதல் அமர்வை நடத்தியிருக்கிறது.

புத்தளம் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஐ.எம் இலியாஸ் தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் பலியாகினர்.

அதேநேரம் புத்தளம் பொத்துவில்லு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட 276 வீடுகள் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments