Subscribe Us

எச்சரிக்கை!! பேஸ்புக்கினால் வந்த வினை - சதித்திட்டங்கள் - காணொளி..


ஜேர்மனியில் 9 பேரைக் சுட்டுக்கொன்றவருக்கும் நோர்வேயில் 2011 ஆம் ஆண்டு 77 பேரைக்கொன்ற Anders Behring Breivik என்பவருக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என்று ஜெர்மனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 9 பேர் பலியனதுடன், 20 பேர் வரையில் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமாக துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த நிலையில், 18வயதான அவர் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இதன்போது பல எழுத்துமூல ஆவணங்கள் மீட்கப்பட்டன.

இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டவர்களை விருந்தகத்துக்கு முகநூல்  மூலம் வரவழைத்த பின்னரே துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


Post a Comment

0 Comments