மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
லங்கா சதொச நிறுவனத்தின் சில முக்கிய ஆவணங்களை எரித்தமை , அரச வாகனங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியமை போன்ற குற்றச்சாட்டினை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதுசாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments