செல்போன், ஸ்மார்ட் வோச் உட்பட இலத்திரனியல் உபகரணங்ளை பயன்படுத்தியோ அல்லது அவற்றை தம்வசம் வைத்து கொண்டு பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளுக்கு 5 ஆண்டுகள் பரீட்சை எழுத தடைவிதிக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த சட்டத்தை இம்முறை உயர்தர பரீட்சையில் இருந்து மேற்படி தீர்மானத்தை செயற்படுத்த உள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியூ. எம்.என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
செல்போன் மற்றும் ஸ்மார்ட் வோச் போன்றவற்றுடன் பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளை பரீட்சைகள் திணைக்களம் கறுப்பு பட்டியலில் சேர்க்கும்.
இதற்கு பின்னர், இவர்கள் விண்ணப்பிக்கும் எந்த பரீட்சைக்கான விண்ணப்பமாக இருந்தாலும் அதனை திணைக்களம் நிராகரிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.
எவ்வித முறைகேடுகளும் இன்றி பரீட்சை எழுதும் பரீட்சாத்திகளுக்கு அநீதி ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சையின் போது கைப்பற்றப்படும் அனைத்து இலத்திரனியல் கருவிகளும் அரசுடமையாக்கப்படும்.
இதுவரை பரீட்சை எழுதியவர்களிடம் இருந்து கைப்பற்றிய 300 செல்போன்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


0 Comments