Subscribe Us

500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் 1000 ரூபா பண வவுச்சருமாக வழங்கிய ஹாபிஸ் நஸீர் அஹமட் - படங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர், ஏறாவூர் பற்றில் இருக்கும் பல பாடசாலைகளுக்கும் நேரடியாக விஜையம் மேற்கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களை நேரடியாக இனம் கண்டு அவர்களில் இன்று தெரிவு செய்யப்பட்ட ஐநூறூ (500) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மாணவர்களுக்கான பாதணிகளைப் பெற்றுக்கொள்ள ஆயிரம் (1000) ரூபா வீதமும் வழங்கி வைத்தார்.

ஏறாவூர் பகுதியின் பின் தங்கிய தூரப் பிரதேச பாடசாலைகளான அல்-அமான் வித்தியாலயம், பஷீர் சேகு தாவூத் வித்தியாலயம், மாக்கான் மாக்கார் வித்தியாலயம், அஷ்ரப் வித்தியாலயம், தாமைரைக் கேணி ஷாஹிர் மெளலானா வித்தியாலயம், மிச் நகர் ஜி.எம்.எம்.எஸ்.வித்தியாலயம், அப்துல் காதர் வித்தியாலயம், ஹிஸ்புள்ளா வித்தியாலயம் போன்ற பாடசாலைக்கு இன்று நேரடியாக ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லீம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் சகிதம் விஜையம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் குழுவினர் அங்கு மாணவர்களின் நிலையினைக் கண்டதன் பின்னரே அவர்களுக்கான உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தனர்.


மேலும் இவ்விழாவில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  இன்று பார்வையிட்ட பாடசாலைகளைப் போல் மீதமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில்  ஏனைய பாடசாலைகளுக்கும் விஜையம் மேற்கொண்டு இந்த வருட முடிவுக்குள் இருபதாயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் பாதணிகள் வழங்கி வைக்க நடவடிக்கை மேர்கொள்வேன் என்று குறிப்பிட்டார்.

 ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலய கேட்போர் கூட்ட மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த துணைத்தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான முழக்கம் மஜீட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான ஏ.முபீன் ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் வை.எஸ்.ஹமீட், மற்றும் பல அதிதிகளும், அதிகாரிகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.



























Post a Comment

0 Comments