Subscribe Us

2 புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் மீண்டும் வருகிறது 'நோக்கியா'



ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியிருக்கும் பிரபல 'நோக்கியா' நிறுவனம் மீண்டும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இதற்காக ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன் பின்லாந்தை சேர்ந்த எச்.எம்.டி. குளோபல் என்ற நிறுவனத்துடன் பிரத்யேகமாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட்டுகள் தயாரித்து விற்பனை செய்யப்படும். 

குறிப்பாக, 2 புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு இறுதிக்குள் நோக்கியா வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு 7.0 இயங்குதளத்துடன் பீரிமியம் மெட்டல் வடிவமைப்பில் வாட்டர் ரெஸிஸ்டன்ட் திறனுடன் வெளிவருகிறது. வழக்கம் போல நோக்கியாவிற்கு என இருக்கும் பிரத்யேக வசதிகளும், தரமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிங்கர் பிரிண்ட் போன்ற பல புதிய பாதுகாப்பு வசதிகளுடன், கேமராவில் பல புதுமைகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் விலை உயர்ந்த ரகத்திலேயே இருக்கும் என தெரிகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நோக்கியா தனது மொபைல் போன்களை தயாரித்து விற்கும் உரிமையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றது. ஆனால், சந்தையில் விண்டோஸ் போன்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியை தழுவியது. இதையடுத்து நோக்கியா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments