Subscribe Us

சிறு துளியை பெருவெள்ளமாக்குவோம் – PAQ ன் பித்ரா வேண்டுகோள்


புனித ரமழானை அடைந்துள்ள நாம் அதிகமான நல்அமல்களை செய்வதற்கு போட்டியிட்டு கொண்டிருக்கின்ற இத்தருணத்தில் அதனோடு இணைந்தாற்போல் ரமழானின் இறுதியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு எளியவர்களுக்கு தர்மம் செய்யும் முகமாக பித்ரா இருந்துக்கொண்டு இருக்கிறது. 

நாம் எவ்வாறு பெருநாளை ஆவலோடு எதிர்ப்பார்த்து இருக்கின்றோமோ அதே எதிர்ப்பார்ப்பு தான் அவர்களுள்ளும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறானதொரு நிலையில் அவர்களையும் இச்சந்தோஷ தினத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க வல்ல இறைவன் வழங்கிய ஒரு வாய்ப்பாக இதனை செய்ய நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

அந்தவகையில் பித்ராவின் நோக்கமாக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. பித்ரா எனும் இந்தத் தர்மம் நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ராவை விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

பித்ரா என்பது கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது பித்ரா கடமையாகும். ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும். முஸ்லிமான ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1503.


நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் உணவில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு ஸாவு’, பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவு, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாவு, உலர்ந்த திராட்சை (கிஸ்மிஸ்) யில் ஒரு ஸாவு என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி 1506


அதாவது நாம் உட்கொள்ளும் பிரதான உணவை
பித்ராவாக கொடுப்பதாகும். நமது பிரதான உணவு அரிசி காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

அதேநேரம் மேற் கூறப்பட்ட நபி மொழிகளில் ஒரு ஸாவு என்று வந்துள்ளது ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும். நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும்.

இருந்தபோதும் அரிசியை மட்டும் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்

பொதுவாக எம்மவர்கள் பித்ராவாக அரிசியை மாத்திரம் கொடுப்பதே என எண்ணி வழங்கி வருவதை தவிர்த்து அரிசியை கொடுக்கும் அதேநேரம் சமையல் பொருட்களையும், இதர பண்டங்களையும் சேர்த்து கொடுப்பது சால சிறந்ததாகும். எம் சகோதரர்களும் எம்மை போல நோன்பு பெருநாளை கொண்டாட வழிவகுக்கும்.

இவ்வாறனதொரு சூழ்நிலையில் தான் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் அமைப்பு கடந்த 4 வருடங்களைப்போல் இம்முறையும் கத்தாரில் வாழும் புத்தளம் சகோதரர்க​ளான உங்களது​ம் உங்களது குடும்பத்தினதும் பித்ராக்களை​ சேகரிக்க களமிறங்கியுள்ளது. உமது பித்ராக்களை எம்மிடம் தருவதன் மூலம் கூட்டாக பித்ராவை விநியோகிப்பதற்கு, அனைவருக்கும் சென்றடைவதற்கு உதவுமாறு உங்களை வினயமாய் வேண்டுகின்றோம்..

​அத்தோடு இதனை கூட்டாக சேகரித்து விநியோகிப்பதே நபிகளாரின் வழிமுறையாகும். இதனை அடிப்படையாக கொண்டே இவ்வருடமும் PAQ புத்தளம் பெரிய பள்ளியுடன் இணைந்து ஸகாத்துல் பித்ராவை கூட்டாக சேகரித்து விநியோகிக்க முடிவு செய்துள்ளது.

2012 ம் ​ஆண்டு ​​மஸ்ஜிதுல் கூபா பகுதியை சார்ந்த 90 குடும்பங்களுக்கு​ம், 2013 ம் ஆண்டு ​​​மஸ்ஜிதுல் கூபா ​மற்றும் அதனை அண்டிய ​பகுதியை சார்ந்த ​​ 115 குடும்பங்களுக்கும், 2014 ம் ஆண்டு புத்தளத்தில் உள்ள பல்வேறு மகல்லாக்களை சார்ந்த 140 குடும்பங்களுக்கும்,  2015 ம் ஆண்டு புத்தளத்தில் உள்ள பல்வேறு மகல்லாக்களை சார்ந்த 125 குடும்பங்களுக்கும் ஸகாத்துல் பித்ரா விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்களினதும் உங்களைச் சார்ந்துள்ளோரினதும் பித்ரா தொகையினை (ஒவ்வொருவருக்கும் தலா QR. 20/-) வழங்கி சென்ற வருடத்தை விடவும் இவ்வருடம் அதிகமான வறிய குடும்பங்களுக்கு எமது ஸக்காதுல் பித்ரா சென்றடைய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இதற்கு பங்களிப்பு வழங்கும் சகோதரர்கள் இத்தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளலாம்.



சகோ-இக்ராம் மரிக்கார் – 55826374
சகோ-மில்ஹான் – 66673425
சகோ-பைரூஸ் – 55463359
சகோ-அம்ஜத் – 66447855
சகோ-ரிபாஹ் – 33128134
சகோ-மஜாஸ் – 33043242


ஊடகப்பிரிவு
கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பு
தோஹா கத்தார்



Post a Comment

0 Comments