சூரியன் FM பெண் அறிவிப்பாளரினால் குறிப்பிடப்பட்ட ஸலாம் தொடர்பான சர்ச்சை தொடர்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சூரியன் FM பெண் அறிவிப்பாளர் ஜீவரூபியின் ஸலாம் தொடர்பான சர்ச்சை கடந்த இரண்டு மூன்று தினங்களாக முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் புயலாக வீசிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று இப்பெண் சூரியன் வானொலி நிறுவனத்தினால் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய (உத்தியோகபூர்வமாக சூரியன் வானொலி முகாமைத்துவம் அறிவிக்கவில்லை)
பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஸலாம் தொடர்பில் குறித்த பெண் அறிவிப்பாளரின் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் குறித்த பெண் தனக்கு நெருக்கமான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் முஸ்லிம் நண்பர்களை தொடர்பு கொண்டு தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சூரியன்FM ஒலிபரப்புச் சேவை நேற்றுமுதல் குறித்த பெண்ணை தற்காலிக இடைநிறுத்தம் செய்துள்ள இச்சந்தர்ப்பத்திலேதான் குறித்த பெண் அறிவிப்பாளர், மேற்படி நர்பகளை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கம் வருமாறு..
“ குற்றச் சாட்டு முன்வைக்கப்படும் ஸலாமை delete செய்து விடுமாறு நான் கூறிய கருத்து இன்று முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் வேதனையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது என்பதை நான் அறிவேன்.
சினிமாப்பாடல் நேரடி நிகழ்ச்சியொன்றின்றின் போது எனது சக அறிவிப்பாளரான கிறிஸ்தோபர், இந்து மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் ‘ அஸலாமு அலைக்கும் ‘ என உச்சரித்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும் என்று உச்சரிப்பதற்கு பதிலாக அவர் பிழையான முறையில் உச்சரிப்பை மேற்கொண்டிருந்தார்.
இவ்வாறான உச்சரிப்பை மேற்கொண்டதில் அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் அவருக்கு போதுமான அறிவு இல்லாமல் இருக்கலாம்.
இவ்வாறான செயற்பாடுகளை மையமாக வைத்துத்தான் அந்த ஸலாம் கூறப்பட்ட குரலினை delete பண்ணுமாறு கூறினேன் ‘. என விளக்கமளித்துள்ளார்.
சினிமாப்பாடல் குறித்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் அடிப்படையான ஸலாத்தை பிரயோகித்தமை கண்டிக்கத்தக்க விடயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும் சூரியன் உட்பட ஏனைய வானொலிகளில் அதிகளவில் தமிழ் சினிமா பாடல்களை விரும்பி கேட்பது எமது முஸ்லிம் சமுகத்தைச் சேர்ந்த பாத்திமாவும், அலிசப்ரியும் , நுவைசும், இர்பானும் தான் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் மறுக்க முடியாது.
இதனை எம்மால் தடுக்க முடியாமல் உள்ள சூழலில் , இவ்வாறனவர்களுக்கு எதிராக எமது கடும் வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிக்காத சூழ்நிலையில் சகோதர இனத்துப் பெண்ணொருவரை அவதூறாக விமர்சிக்க முற்படுவது பிழையானதாகவே நோக்கப்பட்டு வருகின்றது.
நன்றி- srilankam muslims


0 Comments