Subscribe Us

புத்தளம் CIB விவகாரம்...என்ன சொல்லுகிறார் அலி சப்ரி ...


"புத்தளம் நகர எல்லைக்குள் சுமார் 32 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்...அவர்களில் 6 ஆயிரம் சிங்களவர்கள், 4 ஆயிரம் தமிழர்கள் அடங்குவர்...மீதி 22 ஆயிரமும் முஸ்லிம் வாக்காளர்கள்...அதாவது சுமார் 55 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள்...இவர்களில் 80% ஏழைகள்...20% வசதி படைத்தவர்கள்...அந்த 20% இலும் அரைவாசி பேர் கொழும்பில் தமது பெருநாள் உடைகளை வாங்குவார்கள்...

புத்தளத்தில் எண்ணி எண்ணி 10 அல்லது 15 புடைவைக் கடைகளே இருக்கின்றன...நான் குறிப்பிடும் அந்த 55 ஆ யிரம் ஏழைகளும் குறிப்பிட்ட கடைகளில் அவர்கள் கூறும் விலைக்கே பெருநாள் உடுப்புகளை வாங்க நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்...இவர்கள் அல்லாமல் இங்கு வாக்களர்களாக பதியாமல் வாழும் சுமார் 25 ஆயிரம் பேரும் 6ஆம் கட்டை கல்பிட்டி போன்ற பகுதிகளில் இருந்து வருவோருமாக சேர்ந்து ஆக மொத்தம் 150000 மக்கள் உடுப்புகள் கொள்முதல் செய்கின்றனர்...

CIB போன்ற நிறுவனங்கள் இங்கு தமது வியாபாரத்தை தொடுக்கின்றபோது குறிப்பிட்ட ஒன்றரை இலட்சம் மக்களில் பெரும் தொகையினர் அங்கேயே தமக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர்...

காரணம் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல அந்த நிறுவனங்களின் மலிவு விலைதான்...

இவர்களைப் போலவே இங்குள்ள வர்த்தகர்களும் நியாயமான விலைக்கு உடுப்புகளை விற்றால் CIB போன்ற நிறுவனங்களை மக்கள் மொய்க்க வேண்டிய எந்த தேவையுமில்லை...

என்னைப் பொறுத்த வரையில் அந்த 10,15 வியாபாரிகளை விட பல்லாயிரக் கணக்கான ஏழைகள்தான் முக்கியம்"...

இவ்விதம் உணர்ச்சிகரமாக கூறிய சப்ரி ஹாஜியார் பின்வரும் விஷயத்தையும் குறிப்பிட்டார்...

தனது அபான்ஸ் கட்டிடத்தையே இப்ராஹீம் முஹம்மத் முஜீப் என்பவருக்கு ஒரு மாத காலத்துக்கு வாடகைக்கு கொடுத்திருப்பதாகவும் அசோக்கா தியேட்டர் - CIB கதை வீண் வதந்தி என்றும் கூறினார்...அதே நேரம் CIB கேட்டிருந்தாலும் எனது கடைக் கட்டிடத்தை கொடுக்க தயங்கி இருக்கமாட்டேன்...காரணம் அது ஓர் ஏழைகளுக்கான வரப்பிரசாதம் என்று தெளிவாக கூறுகிறார் அலிசப்ரி ஹாஜியார்...

-Ibrahim Nihrir-

Post a Comment

0 Comments