Subscribe Us

கற்பு என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல.ஆணின் எண்ணத்தில் கூட கற்பு வேண்டும்.



முகநூல் உறவு என்பது நம்ம சிலரோடு உண்மையாகப் பழகினாலும் அவர்கள் தருணம் பார்த்து எம்மை கவித்து விடும் போது தோணுகிறது இவ்வளவு நாள் இவர்களையா நம்பிக்கையாளர்கள் என்று நினைத்துப் பழகினோம் என்று...

சில வேளைகளில் யதார்த்தங்களை நாங்கள் எழுதப் போய் சிலர் அது அவர்களுக்கானது என்று தப்பெண்ணம் கொண்டு சண்டை போடுபவர்களும் உண்டு.பெண்கள் ஒழுக்கம் சம்பந்தமாக சில வேளை கருத்துக்கள் சொல்ல அவர்களோடு அன்பாகப் பழகும் ஆண்களை விட்டு தங்களை தூரமாக்க முனைவதாகவும் கருத்துக்கள்.இவை எல்லாம் தாண்டிய முகநூல் பயணம்.....

ஒன்றை தெளிவாக சொல்கிறேன்.ஒரு பெண்ணாய் தனக்கு மஹ்ரமில்லாத ஆணோடு அளவுக்கு மிஞ்சி உறவாடுவது உங்களுக்கு மட்டுமல்ல உங்களை மணக்கப் போகும் மணந்திருக்கும் ஆணுக்கு கொடுக்கும் அவமரியாதையன்றி வேறில்லை.தவிர உறவு பராட்டும் எந்த உறவும் நாளை மறுமையில் உங்களோடு வரப் போவதில்லை.ஆனாலும் அவர்களோடான உறவு பற்றி தெளிவாக விசாரிக்கப் பட்டு அந்த உறவின் எல்லைகளுக்கான கூலி நிச்சியமாக வழங்கப் படும்.

கற்பு என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல.ஆணின் எண்ணத்தில் கூட கற்பு வேண்டும்.தன் மனைவியோ தனக்கு வரப்போகும் துணைக்கோ அவமானமாய் தான் நடக்க கூடாதென்ற எண்ணம் முக்கியம்.தவிர நபி(ஸல்) வாக்கு படி கடைசி காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு குழப்பம் உண்டாகும் என்பதை ஒவ்வோர் ஆணும் தன் குடும்பம் செழிக்க வேண்டுமென்றால் நினைவில் வைக்கவும்.தனது சுதந்திரம் தான் எந்தப் பெண்ணோடும் எப்படியும் பழகுவேன் என்று அடித்துக் கூறும் ஆணும் அதற்கு குப்பாடு போடும் பெண்ணும் பகிரங்க விபச்சாரிகளேயன்றி இஸ்லாத்தில் அவர்களுக்கு வேறு பெயர்கள் இல்லை.

இவை தாண்டி இயக்கச் சண்டைகள் பல இங்கு.அதற்குள் சில சகோதர சகோதரிகளின் சண்டைகள்.நீங்கள் எந்த இயக்கத்திலும் இருங்கள்.ஷிர்க்,குப்ர் செய்யாத செயல்களில் இருந்து முற்றாக வெளியே இருக்கும் நீங்களும் உங்களைச் சார்ந்த அமைப்பும் தூய்மையானது.ஆனால் உங்கள் இயக்க வெறியை இங்கே சாதாரண பொது மகனிடம் அவன் உங்கள் இயக்கம் சாராதவன் என்ற காரணத்துக்காக மனதை புண்படுத்த வேண்டாம்.அதாவது அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்.இறைவன் ஒவ்வோர் மனிதனையும் இன்னோர் மனிதனில் இருந்து மேன்மைப் படுத்தியே வைத்திருக்கிறான்.சிலரின் புகழ் உலகில் எமக்குப் மறைக்கப் பட்டாலும் இறைவனுக்கும் அவனுக்கும் இடையே நெருக்கமென்பது மறுமையில் அவனை பெரிய அந்தஸ்தில் நீங்கள் காணலாம்.

முறன்பாடுகளை மறந்து விடுங்கள்.நாளை உங்களுக்கு மரணம் கூட வரலாம்.அந்த நேரம் எஞ்சப் போவதெல்லாம் நீங்கள் செய்த நல்லமல்களே.எங்கள் கப்றுகளில் நிம்மதியை தரப் போவது நாங்கள் செய்த அமல்களும் சதகாவுமே..

கடைசியாக சில நிமிடங்கள்.எனது ஆக்கங்கள் உங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதனில் உங்ளோடு முறன்பட்டிருந்தால் என்னை இறைவனுக்காக மன்னித்து விடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.தவிர உங்கள் துஆக்களில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் அனைவருக்கும் இந்த ரமழான் அருள். சொரியட்டும்.

-Binth Fathima-

Post a Comment

0 Comments